வித்தியாசமான தமிழ் பெயர்கள்

வித்தியாசமான தமிழ் பெயர்களைத் தேடுகிறீர்களா. இங்கே உங்களுக்காக சில புதுமையான தமிழ் குழந்தைப் பெயர்கள்.
 

அகாதிப

இமயமலை தலைவன்

 

அசுகரன்

செயற்கரிய செயல்

 

அஜகரன்

பெரிய பாம்பு

 

அணன்

சிறந்தவன் ; உயர்ந்தவன்

 

அனுகரன்

உதவி செய்பவன்

 

அருளாசினி

தெய்வ அருளும் ஆசியும் நிறைந்தவள்

 

அளியன்

அன்பு, அருள்

 

அவகரன்

குப்பை

 

அஸிகரன்

வாள் பிடித்தவன்

 

ஆகேறன்

ஆகேறு என்றால் கொன்றை மலர்ச்சரம், கொன்றை வேந்தன்

 

ஆரன்

ஆர் என்றால் நிறைவு, உயர்வு, திரட்சி

 

ஈரன்

ஈரம் உடையவன், அருளாழன் compassionate person

 

ஏரன்

அழகன், ஒழுக்கன், எழிலன், சீரன், பரசு ராமன்

 

ஏறன்

சிவனுக்கும் வழங்கும் பெயர், காளை வாகனன்

 

ஓரன்

ஓர்மை என்றால் சிந்தனை, நினைத்தல்

 

ககாதிப

கருடன் (தலைவன்)

 

கஜகரன்

துதிக்கை, விக்னேச்வரன்

 

கடகரன்

குயவன் (கடம்/பானை செய்பவன்)

 

கணாதிப

கணபதி (கணங்களின் தலைவன்)

 

கமழி

கமழி

 

கமழினி

மணம் நிறைந்தவள்

 

கயன்னங்கை

கயல் + நங்கை = கயன்னங்கை ; கடற்கண்ணி

 

குருசில்

அரசன்

 

குலன்

நல்லோர் குலத்தவன், குலவு என்றால் சேர்ந்திரு என்றும் பொருள், குமுகத்தோடு சேர்ந்திருப்பவன்

 

கோவிலோன்

தலைவன்

 

சசதரன்

சந்திரன் (முயல் தாங்கி)

 

சசிகரன்

சந்திர கிரணம்

 

சசிதரன்

சிவன் (பிறை அணிந்தவன்)

 

சவிகரன்

சோபை/அழகு தருவது

 

சினமிகா

சினம் + மிகா =சினமிகா, கோபம் அறியாதவள்

 

சிற்பிகா

சிற்பிகளின் சோலை

 

சீரன்

சீர், சீர்மை என்றாலும் ஒழுக்கம், அழகு, நேர்த்தி

 

சுககரன்

இன்புறச் செய்பவன்

 

சுசிகரன்

சுத்தம் செய்பவன்

 

சுபகரன்

க்ஷேமம் தருபவன் (ஜோதிடத்தில் சுபகாரன் யார் என்று சொல்லுவர்)

 

சுராதிப

சுரர்களுக்கு/ தேவர்களுக்குத் தலைவன் இந்திரன்)

 

ஜனாதிப

அரசன் (தலைவன்)

 

ஜலதரன்

மேகம் (நீரைத் தாங்குபவன்)

 

தசாதிப

ஒன்பது கிரகங்கள்

 

தனாதிப

குபேரன் (தனத்திற்கு அதிபதி)

 

தராதிப

ராஜா (நரர்களுக்குத் தலைவன்)

 

திசாதிப

திக்குகளின் தலைவன்

 

தினகரன்

சூரியன் (பத்திரிக்கையின் பெயர்)

 

தினாதிப

சூரியன்

 

துகிலன்

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பவன்

 

நகதரன்

கண்ணன்

 

நகாதிப

இமயமலை தலைவன்

 

நகுநா

நகு என்றால் சிரிப்பு; நா என்றால் நெற்கதிர்; நகுநா என்றால் சிரிக்கும் நெற்கதிர் என கொள்ளலாம்

 

நராதிப

ராஜா (நரர்களுக்குத் தலைவன்)

 

நலன்

நலம் மிகுந்தவன்; எல்லா வகை நலனும் உடையவன்

 

நள்ளன்

நட்பு. நள்ளன் நண்பன், அன்பு உடையவன்

 

நிசாதிப

நிசி/ இரவின் தலைவன்/சந்திரன்

 

நிசிகரன்

நிலவு

 

நீரன்

நீர்மை என்றால் ஒழுக்கம், தூய்மை, சிறந்த குணம்