குழந்தை நலம்

Printer Friendly and PDF

குழந்தை நலம் பேண‌ தாயைப்போல‌ யாருமுண்டோ ?. குழந்தையை வளர்க்க‌ தாயின் பங்கு தந்தையை விட‌ பன்மடங்கு அதிகமே. உண்மையில் குழந்தையை ஈன்றெடுத்து வளர்ப்பது ஒரு தெய்வீகப் பரிசு.

குழந்தையை ஈன்றதிலிருந்து அக்குழந்தை நன்றாகப் பேசத் தொடங்கும் வரை, ஒவ்வொரு தாயும் தன் குழந்தை மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதில் உள்ள சிரமங்களை குழந்தை பெற்று, வளர்ப்பவர்கள் மட்டுமே அறிவார்கள்.

முதற்குழந்தை பெற்றெடுக்கும் புதிய தாய்மார்கள் படும் சிரமங்கள் ஏராளம். என்ன ஆச்சோ, ஏன் குழந்தை இப்படி செய்கிறது, என்ன செய்யலாம் இப்போ ? என்று விடை தெரியாமல் தடுமாறும் சந்தர்ப்பங்கள் நிறையவே வரும். பெரியவர்களை துணைக்கு வைத்திருப்பவர்கள் கொஞ்சம் தைரியமாக இருப்பார்கள். தனியே வெளிநாடுகளில் இருக்கும் தாய்மார்களுக்கு சிரமங்கள் அதிகம். அனுப‌வமின்மையால் ஒவ்வொரு விஷயமும் பயமிக்கனவாய்த் தோன்றும் இதனால் ம‌ருத்துவரிடம் ஓட வேண்டிய சூழல் வரும். சில அடிப்படை விசயங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்தினால், மருத்துவரிடம் (டாக்டரிடம்) தொடர்ந்து செல்ல வேண்டிய நிலையை குறைக்கலாம்.

இந்த‌ பக்குவமானது இரு / இரண்டாவது குழந்தை வளர்ப்பின்போது அனைவருக்கும் கிடைக்கப்படும் அற்புதமான‌ கலை ஆகும். குழந்தை வளர்ப்பு குறித்த‌ கட்டுரைகளை இப்பக்கத்தில் காண‌லாம்.